Monday, January 6, 2020

நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில்குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தீர்மானம்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம், திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம்  (04-01-2020) நடைபெற்றது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாடு முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கோடு கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. இந்த சட்டத்துக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது தாக்குதலை ஏவிவிட்ட மத்திய அரசை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதற்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக கவர்னரின் செயல் கண்டனத்துக்குரியது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

புதுச்சேரிக்கு மாநில அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும். காவிரிப்படுகை மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக” அறிவிக்கவேண்டும்.

நெல்லை கண்ணன் மீதான வழக்கை திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment